
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்துள்ளார்.
இது தொடர்பாக சுமந்திரனின் பேஸ்புக் பக்கத்தில் படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் இரசாயன உரங்கள் மற்றும் விவசாய பொருள் பற்றாக்குறையால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் பெரும்போக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில், உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ. சுமந்திரன், கண்டாவளையில் உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்துள்ளார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்து குரலெழுப்புவார் என்றும் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.