இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் கொவிட் தடுப்பூசி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான சிறப்பு குழு கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு டோஸ் போதுமானது என அவர் குறிப்பிட்டார்.
இதன்படி 18 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இதனிடையே, 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.