May 26, 2025 1:35:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு போர்ட் சிட்டியை பொதுமக்களுக்காக திறக்க நடவடிக்கை!

கொழும்பு துறைமுக நகரத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம், 269 ஹெக்டேர் கடல் பரப்பை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான நில அமைப்பு பணிகள் 2018 ஜனவரியில் நிறைவடைந்தது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு நிறுவுவதற்கான சட்டமூலம் 2021 மே 20 அன்று பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த திட்டத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான குடியிருப்புத் தொகுதிகள் மற்றும் வணிக மையங்கள் உருவாக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் முதல் கட்ட பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதன் இணையத்தள தரவுகள் தெரிவிக்கின்றன.