January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெடிபொருட்களுடன் மீரிகமவில் ஒருவர் கைது!

கம்பஹா, மீரிகம பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் நபர் ஒருவரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மீரிகம பகுதியில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 81வோட்டர் ஜெல் குச்சிகள் , 75 கிலோ அமேனியா நைட்ரேட், 107 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 39 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.