July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம் தொடர்பான வீரவன்சவின் பேஸ்புக் பதிவு!

Photo: Facebook/ WimalWeerawansa

தற்போதைய ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமைச்சரவையில் தான் வெளியிட்ட கருத்து தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தெளிவுப்படுத்தும் வகையிலேயே அவர் அந்தப் பதிவை இட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைய காரணம், அவர்கள் எதிர்பார்ப்பவற்றை செய்யாமை அல்ல. எதிர்பார்க்காதவற்றை செய்வதே ஆகும் என்று அவர் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிக்கடி அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன்மூலம் உருவகும் மக்களிடையேயான நம்பிக்கையின்மையை தோற்கடித்து, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டுக்காக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது, அமைச்சரவை பத்திரங்களை ஒரே நாளில் சமர்ப்பித்து நிறைவெற்றாது, அதற்கு போதுமான கால அவகாசத்தை வழங்கி, கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசிமானது என்றும், கூட்டுத் தீர்மானங்களை எடுக்கும் போது, கட்சித் தலைவர்கள் கூட்டம் போன்றவற்றில் ஜனாதிபதி கலந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும் என்றும் வீரவன்ச தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதன் ஊடாக பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியுமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.