May 29, 2025 12:13:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். சங்கானையில் காணாமல் போயிருந்த சிறுவன் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் இருந்து 6 வயது சிறுவனொருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மதியத்திலிருந்து சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில், உறவினர்களும் பிரதேசவாசிகளும் அப்பிரதேசத்தில் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது இரவு 9.30 மணியளவில் குறித்த வாய்க்காலில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.