
File Photo
இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தர உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 8 சிரேஸ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 17 கேர்ணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 42 லெப்டினன் கேர்ணல்கள் கேர்ணல் நிலைக்கும், 60 மேஜர்கள் லெப்டினன் கேர்ணல் நிலைக்கும், 256 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10 லெப்டினன் அதிகாரிகள் கெப்டன் நிலைக்கும், 2 ஆம் லெப்டினன்கள் அதிகாரிகள் 152 பேர் லெப்டினன் நிலைக்கும் 22 கெடட் நிலை அதிகாரிகள் லெப்டினன் (பொதுப்பணி) நிலைக்கும் 2021 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.