May 24, 2025 11:17:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சிங்கம்போல இருந்தவர் நரிபோல மாறிவிட்டார்”: பொன்சேகாவை சாடும் அமைச்சர்

சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, இப்போது பாராளுமன்றத்தில் நரிபோல செயற்படுகின்றார் என்று அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பலத்துடன் சிங்கம்போல சரத்பொன்சேகா யுத்தத்தை முடித்திருந்தார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இப்போது பாராளுமன்றத்தில் நரியைப் போன்று நடந்துகொண்டு, எமது பாரம்பரிய வைத்திய முறைமையை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார் என்று அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.