July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் தினசரி கொவிட் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவடைந்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது ஜூன் மாதத்திலிருந்து இலங்கையில் பதிவான மிகக் குறைந்த தினசரி கொவிட் இறப்பு எண்ணிக்கை ஆகும்.

இதையடுத்து நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்பு எண்ணிக்கை 13,296 ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் தொடக்கத்தில் நாட்டில் கிட்டத்தட்ட 200 கொவிட் இறப்புகள் பதிவான நிலையில் செப்டம்பர் இறுதிப் பகுதியில் இருந்து தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 542  பேர் இன்று (09) இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 25,479 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 32,554 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 79,629 ஆக உயர்வடைந்துள்ளது.