July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை மாணவர்களின் கல்வியை பாதுகாக்க கோரி மனு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை பாதுகாக்கக் கோரி பாடசாலை ஒன்லைனில் கையொப்பம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயல்பாடு குறித்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படும் என்று அதன் ஏற்பாட்டாளர் கே.ஏ. நிரோஷன பெர்னாண்டோ கூறினார்.

கடந்த காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆசிரியர் மற்றும் அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

கடந்த 90 நாட்களாக நாட்டில் கல்வி வாய்ப்பை இழந்துள்ள மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கட்சி பேதமின்றி அனைத்து பெற்றோர்களும் இந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை 21 ஆம் திகதி முதல் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடில் குறித்த தினத்தில் பணிக்கு திரும்ப  போவதில்லை எ ன ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.