
ள்யானைத் தந்த கஜமுத்துக்களுடன் மூவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய வவுனியா நகரில் யானைத் தந்த கஜமுத்துக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து நான்கு கஜமுத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல் மாகாவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசங்களை சேர்ந்த 53, 30 மற்றும் 29 வயதுடையவர்கள் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கஜமுத்துக்கள் நான்கையும் வவுனியா பொலிஸாரிடம் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.