புதிய சட்டம் ஒன்றின் கீழேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் பரிந்துரைகளுக்கு ஏற்பவே இவ்விடயத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற விசேட குழுவுக்கு அறிவித்துள்ளார்.