May 25, 2025 12:02:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சி தொடர்ந்தும் போராடும்’: சஜித் பிரேமதாஸ

விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக தான் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராடுவர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ மஹாஉஸ்வெவ பிரதேசத்தில் நெற்செய்கை விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொண்டு, உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஒன்றுக்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதன்போது விவசாயிகளை வாழ வைப்பதற்கான விடயங்களை வலியுறுத்தவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

“யாரும் ஒருபோதும் கடினமான முடிவுகளை எடுக்கக்கூடாது. தேவைக்கேற்ப மக்களின் நலனுக்காக ஒரு படி பின்வாங்குவதில் தவறில்லை.

உடனடியாக சேதனப் பசளைக்கு முழுமையாக விவசாயத்தை மாற்றக்கூடிய சாத்தியம் மிகக் குறைவு. அதனை முறையாகத் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

இருப்பினும், அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் கவலை தருகின்றன”

என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.