July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஆசிரியர் சங்கங்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும்”: கஜேந்திரகுமார்

ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு நவம்பர் 21ஆம் திகதி வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் தீர்வு வழங்க முடியும் என்றால் ஏன் இப்போதே அந்த தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர் சங்கங்கள் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகின்றனர். இந்நிலையில் 2018 ஆண்டு முன்னைய அரசாங்கம் முன்வைத்த யோசனையை அரசங்கம் நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாக கூறுவதில் நியாயம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆசிரியர் சங்கங்கள் போரட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இருநூறுக்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது முற்று முழுதாக ஆரிசியர் சங்கங்களை சமூகத்திற்கு எதிராக திசை திருப்பும் நோக்கமேயாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு அபிவிருத்தி வேலைதிட்டங்களுக்காக பல மில்லியன் ரூபாக்களை அரசாங்கம் ஒதுக்குகின்ற நிலையில், பல மில்லியன் ரூபா கறுப்புப்பணம் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காது அரசாங்கம் செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.