November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரச மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடி தீர்வைக் காணத் தவறினால், ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் ஒரு கொவிட் தொற்று கொத்தணியை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எழுதிய கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழு இந்த பிரச்சினையை நுட்பமான முறையில் ஆராய்ந்து சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த கடிதத்தில் முன்மொழிந்துள்ளது.

சம்பள அடிப்படையிலான பிரச்சனைகள் உரிய கால இடைவெளியில் அமைச்சரவையால் தீர்க்கப்படாமல் உள்ளமையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய ஊதியக் கொள்கையின் முந்தைய மீறல்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தப்பட வேண்டும், கல்வியைப் தொடர முடியாத சிறுவர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட விடயங்களை அந்த சங்கம் வழியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான நேரத்தில் சரியான தீர்வை வழங்கத் தவறினால், மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி வாய்ப்புகளை தொடர வழிவகுக்கும், இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதோடு, சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் பலருக்கு நன்மையாக அமையும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய சம்பள கொள்கையைப் பாதுகாப்பதோடு, ஆசிரியர்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சி, இலவசக் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்யும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.