
File photo
டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முழுமையாக கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் குறியீட்டின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கான டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு எந்தவொரு நபரும் போலியான அட்டையை தயாரிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காத வகையில் முழுமையான பாதுகாப்புடன் QR குறியீடு ஊடாக குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.