May 4, 2025 18:56:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தீர்வின்றேல் முழுமையாகப் போராட்டத்தில் குதிப்போம்”: யாழ். தாதியர் உத்தியோகத்தர்

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசிடம் ஏற்கனவே வைத்த 7 அம்ச கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வை வழங்குமாறு கோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கவனத்தில் எடுத்து, தீர்வு தராத பட்சத்தில் எமது போராட்டமானது மேலும் வலுப்பெற்று சங்கத்தின் அனுமதியுடன் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து முற்று முழுதான போராட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் 40இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.