May 4, 2025 8:42:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க முடிவு!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிப்பதற்கு கொவிட் தடுப்புச் செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டோபர் 21 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தளர்த்தப்பட்டது.

எனினும் தொற்று அச்சுறுத்தல் தொடர்வதால், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை 14 ஆம் திகதி தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் அதனை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.