‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவண விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக திருக்குமார் நடேசன், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கமைய இன்று காலை அவர், அங்கு சென்றுள்ளார்.
உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் ஊழல்களை வெளிப்படுத்திய ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பென்டோரா பேப்பர்களில் பெயர் வெளியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைய வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக திருக்குமார் நடேசன் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.