January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்

இலங்கையின் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபயவினால் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அவர், அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

2020 ஜனவரி முதல் இதுவரையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.