February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளாதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினாராக பதவியேற்ற இவர், பின்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்.

இதன்படி இவர் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.