February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஒழுங்குவிதிகளை மக்கள் மீறுவதாக சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு

File Photo

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை மீற ஆரம்பித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த தினங்களாக சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தும் போதும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், மக்கள் சுகாதார விதிமுறைகளை பேணி நடப்பதில் கவனயீனமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் மக்கள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டமையால் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பாரிய விளைவுகளையே இது நினைவுபடுத்துகிறது என குறிப்பிட்டுள்ள உபுல் ரோஹண, அவ்வாறான நிலைக்கு நாடு மீண்டும் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளார்.

எனவே, பொது மக்கள் நடமாடும் போது சுகாதார ஒழுங்குவிதிகளை பேணி நடந்துகொள்வதன் மூலமாக கொவிட் கொத்தணிகள் உருவாகுவதை தடுக்க முடியுமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.