தொழில்வாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸாக பைசர் தடுப்பூசி வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்வோர் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அத்தியவசியமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சினோபார்ம் தடுப்புசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட பணியாளர்கள் பூஸ்டர் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு தமது நாடுகளுக்கு வருகை தரலாம் என கட்டார் மற்றும் சவூதி அரேபியா அறிவித்துள்ளன.
தற்போது வெளிநாடுகளில் பணிபுரியச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
இவர்களில் 8 ஆயிரம் பேருக்கு ஆரம்ப கட்டமாக பைசர் தடுப்புசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.