February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகள் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களாக கடமையாற்றி வந்த பத்மினி விஜேசூரிய, நிஷாந்தினி செனவிரத்ன மற்றும் ரேனுகா ஜயசுந்தர ஆகியோரே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பதவி உயர்வு, உடன் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.