
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய மீளாய்வு விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சை மீளாய்வு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி, 2021 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியாகும்.
அதேநேரம், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.