April 17, 2025 14:55:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையை மதிக்கவும்’: ரவூப் ஹக்கீம்

file photo

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு வட மாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 31 வருடங்கள் பூர்த்தியாகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது பூர்வீக இடங்களில் வாக்களிப்பதற்கான மக்கள் உரிமைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களின் வாக்களிக்கும் விருப்பங்களை ஐநா அகதிகள் சாசனத்துக்கு ஏற்ப விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“பலவந்த வெளியேற்றம் வடக்கு முஸ்லிம்களை தமது பூர்வீக இடங்களுக்கு செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தன.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் முஸ்லிம்கள் பூர்வீக இடங்களுக்கு செல்ல முடியாது போனது.

அதிகமானவர்கள் தொடர்ந்தும் புத்தளம் மற்றும் சில மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் மாவட்டங்களில் பிள்ளைகளை கல்விக்காக பாடசாலைகளில் இணைந்துள்ளனர். தொழில்வாய்ப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிக்க விரும்புகின்றனர். அது வழங்கப்பட வேண்டும்”

என்று ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டள்ளார்.