2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அதனை சபையில் சமர்ப்பித்தார்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கமைய 2022 இல் அரசாங்கத்தின் முழு செலவீனம் 2,505.3 பில்லியன் ரூபாயாகக் காணப்படுகின்றது.
இதன்படி, அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் செலவு 3,300 கோடி ரூபாயால் குறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுச் சேவைகளுக்காக 12.6 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
அத்துடன், ஜனாதிபதிக்காக 2.78 பில்லின் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் ஜனாதிபதியின் செலவுக்காக ஒதுக்கப்படும் நிதி இந்த வருடத்தை விடவும் 6.6 பில்லியன் ரூபாவால் குறைவடையவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 373 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்தை விடவும் 18 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்.
இதேவேளை நிதி அமைச்சரின் வரவு – செலவுத் திட்ட உரையை நவம்பர் 12 ஆம் திகதி நடத்தவும், அதன் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 10 ஆம் திகதி நடத்தவும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.