
பென்டோரா பேப்பர்ஸ் இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியான திருக்குமார் நடேசனுக்கு நாளை இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பென்டோரா பேப்பர்களில் பெயர் வெளியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பென்டோரா ஆவண தகவல்களுக்கு ஏற்ப வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கே, திருக்குமார் நடேசன் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பென்டோரா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க, விசேட விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.