January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் வசதியற்ற குடும்பத்திற்கு இராணுவத்தால் வீடு!

வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் வசதியற்ற குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

இராணுவத்தின் சமூக நலன் திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய இந்த வீடு நிர்மாணிக்கப்படுகிறது.

அதற்கமைய, வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி மோகன்ராஜ் மகேஸ்வரி குடும்பத்திற்கு இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.