File Photo
மீகொடை பகுதியில் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தியதால் இரு நபர்களால் தாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாது மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபரை ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தியதோடு தூரமாக நிற்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சந்தேக நபர், ஊழியரை மிரட்டியுள்ளார்,
பின்னர் அங்கிருந்து சென்ற குறித்த நபர் சிறிது நேரத்தில் மற்றொரு நபருடன் வந்து அந்த ஊழியரை தாக்கியுள்ளார்.
தாக்குதலை தடுக்க முயன்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மற்றொரு ஊழியரும் இரண்டு சந்தேகநபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் பாதுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது சந்தேகநபர்கள் முழு தலைகவசங்களை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மீகொடை போலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.