‘பென்டோரா பேப்பர்ஸ்’ நிதி மோசடிச் சம்பவங்களில் தொடர்புபட்ட இலங்கையர்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பென்டோரா பத்திரங்கள் மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் பல நாடுகளும் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்குரோத்து அரசியல், சேறு பூசல் மற்றும் அற்ப அரசியல் இலாபங்கள் இன்றி நிதி மோசடி தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மோசடிக்காரர்களைத் தேடும் உண்மையான, நடுநிலையான, வெளிப்படைத் தன்மையுள்ள மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை ஒத்த விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.