2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரையில் 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கட்டட நிர்மாணத் தொழிலும் ஒப்பந்த காரர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன ர். கட்டிட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் 20 வீதம் முதல் 90 வீதம் வரை விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு மாகாண கட்டட ஒப்பந்த காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கிடையில் 2021 ஆம் ஆண்டுக்கான மிகுதி 1522 மில்லியன் ரூபாவையும் நிதி அமைச்சு வடக்கு மாகாண சபைக்கு வழங்குமா என்பது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.