இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய வெளியுறவுச் செயாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா நாடு திரும்பியுள்ளார்.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கை வந்த வெளியுறவுச் செயலாளர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
இதேவேளை வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவிடம் உட்பட கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் கலாச்சார மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டார்.
அத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் திறந்து வைத்தார்.
தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார்.