April 30, 2025 20:26:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு திட்டம்!

ஒக்டோபர் 6 ஆம் திகதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

சம்பள முரண்பாட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரையில் அரசாங்கம் அதற்கு தீர்வு காண நடவடிக்கையெடுக்கவில்லை என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆசிரியர் தினத்தில் நாடு முழுவதும் 312 கோட்டக் கல்வி பணிமனைகளையும் அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அமைச்சரவை கூட்டங்களிலும் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.