20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி திட்டம் ஒக்டோபர் 11 முதல் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய இந்த மாத இறுதிக்குள் 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கான கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.