தனக்கு அரசியலுக்கு வருவதற்கு எவ்வித நோக்கமும் இல்லை என்று ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் போதே, ரோஹித ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தந்தை மகிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே தான் குருநாகல் மாவட்டத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கிலேயே சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், வாக்கு சேகரிக்கும் நோக்கம் இல்லையென்றும் ரோஹித ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
“பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டை நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளில் நான் ஈடுபட்டு வருகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.