November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் ஒக்டோபர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

ஆளும் தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட பின்னர், நவம்பர் மாதத்தில் நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அரச செலவீனம் 3300 கோடி ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் செலவுக்கான நிதி ஒதுக்கீடும் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இம்முறை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.