November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு, வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் (சென்சார்) கண்டுபிடித்ததற்காக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.