
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்பதால் மாணவர்களுக்கு வினைத்திறனுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் அடக்குமுறைகளால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க முயற்சிக்காமல், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு வழங்க வேண்டும் என்று ருவன் விஜேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
“நல்லாட்சி அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்தது. 2020 ஆம் ஆண்டளவில் இந்த சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது.
எனினும், 2019 ஆம் ஆண்டு நாம் தோல்வியுற்றதால் அதனை செயற்படுத்த முடியாமல் போனது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.