January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மின்சாரத் தொழில் துறையில் 95 வீதமானவர்கள் அங்கீகரிக்கப்படாதவர்கள்!

இலங்கையில் மின்சாரம் சார்ந்த தொழில் துறையில் பணிபுரியும் 95 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டவர்கள் இல்லை என்று இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் 45,000 பேர் மின்சாரம் சார்ந்த தொழில் ஈடுபட்டுவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களில் பலர் தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்களர் இல்லாததால், வீட்டு மின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்றபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர்க்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மின்சாரம் சார்ந்த தொழில் ஈடுபடுபவர்களுக்கு இலவச NVQ3 கற்றை நெறியை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த பாடநெறியை பூர்த்தி செய்யும் அனைத்து மின்சாரம் சார்ந்த தொழிலார்களும் தகுதி பெற்றவுடன் தொழில்முறை உரிமத்தை எளிதாகப் பெறலாம்.

இந்த மாதம் முதல் மாவட்ட அளவில் மின் தொழில்முறை உரிமம் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், மின் சார்ந்த தொழில் ஈடுபடுபவர்கள் தொழில்முறை உரிமங்களைக் கட்டாயம் பெற வேண்டும் என்ற விதிமுறைகள் அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.