May 26, 2025 1:35:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சில மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இயற்கை அனர்த்தங்களினால்  ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.