இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தென் மாகாணம் உள்ளிட்ட கண்டி, களுத்தறை, தெஹிவலை, பன்னிபிட்டிய, காலி, ஹொரனை, ரத்மலானை, மத்துகமை, அம்பலங்கொடை ஆகிய பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே இவ்வாறு பல பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மின் தடையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.