
இலங்கையில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்தப் பாடசாலைகள் மாகாண சபைகளின் கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளதாக மாகாண ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.