இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் ஒத்துழைப்பைப் பெற சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 டுபாய் கண்காட்சியின் ‘இலங்கை தினத்தில்’ யொஹானியின் பாடல்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட அமைச்சு தீர்மானித்துள்ளது.
“மெனிகே மகே ஹிதே” பாடலின் மூலம் யொஹானி டி சில்வா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளில் பிரபல்யமடைந்துள்ளார்.
“எக்ஸ்போ 2020 டுபாய்” கண்காட்சியில் பன்முக கலாசார நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு விசேட பெயர் நாமமாக யொஹானி திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
டுபாயில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் வெளியிடவுள்ள பாடலுக்கு அமைச்சு சுமார் ஐந்து மில்லியன் ரூபாயை செலவிட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.