இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நவுபர் மௌலவி உட்பட 24 பேருக்கே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இவ்வாறு தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டவர்களில் சாஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், ஷாஹித் அப்துல் ஹக், ஆதம் லெப்பே, இல்யாஸ் ஜவுபர், மொஹமட் ஸனஸ்தீன், மொஹமட் றிஸ்வான் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் மீது ஈஸ்டர் தாக்குதலுக்கு திட்டம் தீட்டல், உதவி செய்தல் உட்பட 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதிவாதிகளில் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.