February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீரிகமவில் இளம் தம்பதி சடலங்களாக மீட்பு!

File Photo

இலங்கையின் மீரிகம, லிந்தர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பெண் மற்றும் ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் இந்த சடலங்கள் மீட்கப்பட்ட போது பெண்ணின் கைகள் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும், ஆணின் சடலம் அதற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனால் மனைவி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதன் பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்துள்ள இருவரும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் எனவும், அவர்களுக்கு நான்கு வயது மகன் ஒருவர் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் பெற்றோர்களுடன் வசித்து வந்த நிலையில் அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்று திரும்பிய போது சடலங்களை கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.