January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டியில் வரலாற்று உயர்வு

Stock Exchange Common Image

கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி (ASPI) வரலாற்றில் முதற்தடவையாக 9,500 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்றைய பரிவர்த்தனை முடிவில், அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி 9,542.33 புள்ளிகளாக காணப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டி முந்தைய தினத்தை விடவும் இன்று 100.03 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது. இது 1.06 வீத உயர்வாகும்.

இதேவேளை S&P SL20 விலைச் சுட்டியிலும் குறிப்பிடத்த அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய பங்குளின் மொத்த புரள்வின் பெறுமதி 36.20 பில்லியன் ரூபாவாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.