May 24, 2025 12:06:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல் ‘எவர் ஏஸ்’ கொழும்புக்கு வருகிறது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்” கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களில் மாத்திரமே இந்த கப்பல் பயணிக்க முடியுமான வசதிகள் காணப்படுகின்றன.

எவர் ஏஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல்சார் வணிக வரலாற்றில் இந்தக் கப்பலின் வருகை மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று துறைமுக அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

400 மீட்டர் நீளத்தை உடைய இந்தக் கப்பல் 23,992 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.