இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் வாழ்த்துக்களை வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள், சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு திட்டங்களையும் மேம்படுத்திக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பௌத்த விவகாரங்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் யாத்திரிகர் விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.