உலகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து மற்றும் ஊழல்களை வெளிப்படுத்திய ‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரூபமா ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியாவார்.
நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவன் திருக்குமார் நடேசன் ஆகியோர் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளைக் கொள்வனவு செய்வதற்கு ஷெல் எரிவாயு நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து இலாபமீட்டும் ஒப்பந்தங்களைப் பெறுவதில் முன்னின்று செயற்பட்டுள்ளதாக நிரூபமா மற்றும் திருக்குமார் நடேசன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மள்வானை பிரதேசத்தில் நிரூபமா, நடேசன் மற்றும் பஸில் ராஜபக்ஷ இணைந்து நிர்மாணித்ததாகக் கூறப்படும் வீடு தொடர்பான தகவல்களும் இரகசிய ஆவணங்களில் வெளியாகியுள்ளன.